பிராமணர்களுக்காக புதிய கட்சி, 33 தொகுதிகளில் போட்டி: நடிகர் எஸ்.வி.சேகர்

பிராமணர்களுக்காக புதிய கட்சி தொடங்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் பாஜக நிர்வாகியும், நடிகருமான எஸ் வி சேகர் நியூஸ் 7 தமிழுக்கு…

பிராமணர்களுக்காக புதிய கட்சி தொடங்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் பதிவு
செய்யப்பட்டுள்ளதாக நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் பாஜக நிர்வாகியும், நடிகருமான எஸ் வி சேகர் நியூஸ் 7
தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அனைவருக்குமான தலைவராக இருக்க வேண்டும். ஆனால் அவர் மோடியை விட பெரியவராக தன்னை காட்டிக்கொள்கிறார். அதனால் அவரை எதிர்க்கிறேன். அண்ணாமலை வருவதற்கு முன்பே பாஜக வளர்ந்து கொண்டுதான் இருந்தது.

அண்ணாமலைக்கு முன்பு கட்சியின் வளர்சசி 4 சதவீதமாக இருந்தது. அண்ணாமலை வந்த பிறகு 3.6 சதவீதமாக உள்ளது. அண்ணாமலைக்கு எதுக்கு Z பிரிவு பாதுகாப்பு.?அண்ணாமலையே தனக்கு எதிர்ப்பு இருப்பது போல உருவாக்கி வைத்துள்ளார். அண்ணாமலை ஜாதி அரசியல் செய்து வருகிறார். அதனால் அவரை எதிர்க்கிறேன். பிஜேபி என்றால் அது மோடியின் முகம் மட்டுமே. அதன் பிறகு அமித் ஷா தான்.

பிராமணர்களுக்காக புதிய கட்சி தொடங்கப்பட்டு தேர்தல் ஆணையத்திலும் பதிவு
செய்யப்பட்டுள்ளது. அடுத்த தேர்தலில் பிராமணர்கள் கட்சி தேர்தலில்
போட்டியிடும். கட்சி பெயர், கொடி குறித்த விவரங்களை சொல்ல முடியாது. அதற்காக குழு உருவாக்கப்பட்டுள்ளது. அக்குழு அறிவிக்கும். 33 தொகுதிகளில்
பிராமணர்கள் நிற்பார்கள். பிராமணர்கள் மட்டும் ஓட்டு போட்டால் போதும்” என எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

பேட்டியை முழுமையாக காண:

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.