புதிய பொலிவுடன் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட ‘எந்திரன்’! ரஜினிகாந்த் ரசிகர்கள் மகிழ்ச்சி!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான, எந்திரன் திரைப்படம் புதுப்பொலிவுடன் ஓடிடி தளத்தில் மீண்டும் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் எந்திரன்.…

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான, எந்திரன் திரைப்படம் புதுப்பொலிவுடன் ஓடிடி தளத்தில் மீண்டும் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் எந்திரன். ஷங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் சந்தானம், கருணாஸ், தேவ தர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் ரஜினி வசீகரன் என்ற விஞ்ஞானி வேடத்திலும், சிட்டி என்ற ரோபோ வேடத்திலும் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இடம்பெற்றிருந்த கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்த்து பிரம்மாண்ட வெற்றியை பெற்று தந்தது. மேலும், கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படங்களின் வசூலை இந்த படம் மிக சுலபமாக முறியடித்து சாதனை படைத்தது.

https://twitter.com/sunnxt/status/1666875238892847104

 

இந்நிலையில், ‘எந்திரன்’ திரைப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாகியுள்ளது. அதாவது, முதன்முறையாக டிஜிட்டலில் ரீமாஸ்டர் செய்து, 4k அல்ட்ரா எச்.டி.தரத்தில் டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷனில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இந்த திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.