முக்கியச் செய்திகள் சினிமா

மூன்று மாறுபட்ட தோற்றங்களில் டோவினோ தாமஸ் நடிக்கும் புதிய பட அப்டேட்

நடிகர் டோவினோ தாமஸ் மூன்று வேடங்களில் நடிக்கும் பான் இந்திய திரைப்படம் “அஜயந்தே ரண்டம் மோஷனம்” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் தனது திரை பயணத்தில் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் திரைப்படம் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’. இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜிதின் லால் இயக்குகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையைச் சொல்லும் இப்படத்தில் டோவினோ மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார். படத்தின் டைட்டில் கேரக்டர்களான மணியன், அஜயன், குஞ்சிகேலு மூன்று பாத்திரங்களில் மாறுபட்ட தோற்றங்களில் டோவினோவே நடிக்கவுள்ளார். இப்படத்திற்குக் கதை மற்றும் திரைக்கதையை சுஜித் நம்பியார் எழுதியுள்ளார். பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

பான்-இந்திய திரைப்படமாகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ படம் 3டியில் வெளியாகவுள்ளது. கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சுரபி லட்சுமி என மூன்று நாயகிகள் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த தென்னிந்தியத் திரையுலகின் பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கும் முதல் மலையாளப் படம் இதுவாகும்.

மேலும் இப்படத்தில் பாசில் ஜோசப், கிஷோர், ஹரிஷ் உத்தமன், ஹரீஷ் பேரடி, ஜெகதீஷ் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை யுஎம்ஜி புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கிறது.

இப்படத்தின் திரைக்கதை கேரளாவின் களரி எனும் தற்காப்புக் கலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதால், நடிகர் டோவினோ பிரத்தியேகமாகக் களரி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டாஸ்மாக் பார், திரையரங்குகளை மூட வேண்டும்: வழக்கு!

EZHILARASAN D

ஒரு சூறாவளி கிளம்பியதே! ரெய்னா தாண்டவம் தொடங்கியதே!

EZHILARASAN D

சென்னையில் 37 பள்ளிகளில் பரிட்சார்த்த முறையில் காலை இலவச சிற்றுண்டி திட்டம்!

EZHILARASAN D