முக்கியச் செய்திகள் தமிழகம்

“அதிமுக இணைப்பு பற்றி டிடிவி.தினகரன் பேசுவது விநோதமானது”; அமைச்சர் ஓஎஸ்.மணியன்!

இரட்டை இலைச் சின்னத்தை முடக்குவதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்ற டிடிவி தினகரன், அதிமுக இணைப்பு பற்றி பேசுவது விநோதமானது என அமைச்சர் ஓஎஸ்.மணியன் கூறியுள்ளார்.

18 எம்எல்ஏக்களை தன்னோடு அழைத்துச் சென்று, அதிமுக ஆட்சியைக் கலைத்து, இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி சதி செய்தவர் டிடிவி தினகரன் என அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

நாகப்பட்டினம் சாமந்தான் பேட்டை மீனவ கிராமத்திலிருந்த அரசு நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்ற கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மேற்குறிப்பிட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும், சசிகலாவை வரவேற்று சுவரொட்டி ஒட்டும் அதிமுகவினர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் தொடர்ந்து இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம்: முதல் பணியே இதுதான்!

Ezhilarasan

தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Gayathri Venkatesan

குடியாத்தம் அருகே வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை!

Saravana Kumar

Leave a Reply