தகவல் பரிமாற்றத்துக்கு அதிகம் உதவும் வாட்ஸ்அப்பில் தொடர்ச்சியாக புதுப்பிப்புகள் வருகின்றன.
வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி முதலில் தகவல்களையும் புகைப்படங்களையும் அனுப்ப வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆவணங்களை அனுப்பும் வசதி சேர்க்கப்பட்டது. தற்போது வீடியோவைப் பதிவு செய்து அதை பிறருக்கு பகிரும் வசதியும் சேர்க்கப்பட்டுவிட்டது. ஆடியோ அழைப்பு, வீடியோ அழைப்பு வசதியும் சேர்க்கப்பட்டது. வார்த்தைகளைப் பயன்படுத்தி தகவல் பரிமாற்றப்பட்டது. அதோடு, எமோஜிக்கள் மூலம் ரியாக்ஷன்ஸை பகிரும் வசதியும் சேர்க்கப்பட்டது. எமோஜிக்கள் விதவிதமாக புதிது புதிதாக சேர்க்கப்பட்டன. இதுபோன்ற வசதிகள் எல்லாம் வாட்ஸ்அப் பயனர்களுக்கு தகவல்களை பரிமாற பெரிதும் உதவிகரமாக இருந்தன.
தற்போது வாட்ஸ்அப்பை பயன்படுத்துபவர்கள் வார்த்தைகளைக் காட்டிலும் எமோஜிக்களையே அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். நாம் அனுப்பிய தகவல்களை நீக்கும் வசதியும் சேர்க்கப்பட்டது. தற்போது தவறுதலாக நாம் நீக்கிய தகவலையும் மீட்டெடுப்பதற்கு வசதியாக UNDO பட்டன் சேர்க்கப்படவுள்ளது. எனக்கு மட்டும் டெலீட் செய்யவும் (Delete for me) மற்றும் அனைவருக்கும் டெலீட் செய்யவும் (Delete for everyone) என்ற இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. இதில் தற்போது நீக்கப்பட்ட தகவல்களை மீண்டும் கொண்டுவர Undo பட்டன் உதவியாக இருக்கும். இந்த புதிய ஆப்ஷன் வாட்ஸ்அப் பயனர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








