கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர வனத் துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தடை விதித்துள்ளனர்.
மருதமலை அடிவாரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் வனப் பகுதியில் உள்ள இக்கோவிலில், காட்டு யானை, சிறுத்தை, காட்டுப் பன்றி ,மான் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் வனப் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை வீசிச் செல்வதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், மருதமலை வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பை, வாட்டர் பாட்டில் கொண்டு வர வனத் துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தடை விதித்துள்ளனர். மருதமலையில் உள்ள கடைகளிலும் பிளாஸ்டிக் கவர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.சோதனைக்குப் பிறகே பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா







