முக்கியச் செய்திகள் இந்தியா

ரயிலில் கைக்குழந்தையுடன் பயணிப்பவர்களுக்கு புதிய வசதி

ரயிலில் கைக்குழந்தையுடன் பயணிப்பவர்களுக்கு படுக்கையுடன் ஒரு சிறிய படுக்கையை அமைத்து ரயில்வே நிர்வாகம் ஒரு புது முயற்சியை மேற்கொண்டுள்ளது. 

கைக்குழந்தைகளுடன் பயணிக்கும் பயணிகளுக்கு ரயில் பயண அனுபவத்தை சிறந்ததாக மாற்றும் முயற்சியில் இந்திய ரயில்வே புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதுதொடர்பாக ரெயில்வே நிர்வாம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கைக்குழந்தைகளுடன் பயணிப்பவர்களுக்கு ரயில் பயணத்தை மிகவும் வசதியாக மாற்றும் வகையில் படுக்கையின் ஓரத்தில் மடிக்க கூடிய வகையிலான சிறிய படுக்கை ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுடன் பயணம் செய்யாத சாதாரண பயணி அந்த படுக்கை பயன்படுத்தும் போது, அதில் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்டாப்பர் மூலம் மடித்து வைக்க முடியும்.

 

இந்த சிறிய படுக்கையானது 770மிமீ நீளமும், 255 மிமீ அகலமும் கொண்டது. ஒரு முன்னோட்டத்திற்காக இந்த வசதியினை ‘லக்னோ மெயில்’ ரயிலில் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், இது ஒரு முன்னோடி திட்டம் எனவும், வருங்காலங்களில் ரயில்வே பயணிகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், ‘பேபி பெர்த்’ என்ற திட்டத்தை மற்ற ரயில் சேவைகளுக்கு விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

12 நாடுகளில் வேகமாகப் பரவி வரும் குரங்கு காய்ச்சல்

Ezhilarasan

சுட்டெரிக்கும் வெயில் – தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

Halley Karthik

தலிபான்களால் மோசமாக சிதைக்கப்பட்ட டேனிஷ் சித்திக்கின் உடல்: அதிகாரிகள் அதிர்ச்சி

Gayathri Venkatesan