தன்னார்வலர்களுக்கு இலவச எலெக்ட்ரிக் வாகனம் வழங்கிய நிறுவனம்!

கோவையில், புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் அறிமுக விழாவில் இலவச உணவு வழங்கும்  தன்னார்வலரான “பசியாற சோறு” அமைப்பினருக்கு  இலவசமாக வாகனம் வழங்கப்பட்டது. தென்னிந்திய அளவில் கடந்த இருபது வருடங்களாக மோட்டார் மற்றும் பம்ப்…

கோவையில், புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் அறிமுக விழாவில் இலவச உணவு வழங்கும்  தன்னார்வலரான “பசியாற சோறு” அமைப்பினருக்கு  இலவசமாக வாகனம் வழங்கப்பட்டது.

தென்னிந்திய அளவில் கடந்த இருபது வருடங்களாக மோட்டார் மற்றும் பம்ப் உற்பத்தியில் முன்னனி நகரமாக கோவை உள்ளது. கோவையில் மோட்டார் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பரதன் ஒசோடெக் எனும் புதிய நிறுவனம் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில்
ஈடுபட்டுள்ளனர்.

விவசாயம், குறுந்தொழில் உள்ளிட்ட அனைத்து வணிக துறைகளில் பாரங்கள் ஏற்றி செல்லும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த எலக்ட்ரிக் இரு சக்கர
வாகனத்தை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்
அறிமுகப்படுத்தி வைத்தார்.

புளுடூத்,ஜி.பி.எஸ்.உள்ளிட்ட மொபைல் செயலிகளுடன் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அதிக பாரங்களை ஏற்றி செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாகனம் அனைத்து தரப்பினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது என தெரிவித்த நிறுவனர் பரதன், தங்களது இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் தன்னார்வலர்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை இலவசமாக இந்த புதிய வாகனம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சோமனூர் பகுதியில் இலவச உணவு வழங்கி வரும் “பசியாற சோறு” எனும் அமைப்பினருக்கு புதிய எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனம் இலவசமாக வழங்கப்பட்டது.

ரூபி.கா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.