RCB அணிக்கு புதிய பயிற்சியாளர்; அடுத்தாண்டு IPL போட்டியில் சாம்பியன் பட்டம் பெற வைப்பார் என நம்பிக்கை!

ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக ஜிம்பாவே நாட்டின் முன்னாள் வீரர் ஆண்டி பிளவர், நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.  இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த…

ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக ஜிம்பாவே நாட்டின் முன்னாள் வீரர் ஆண்டி பிளவர், நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.  இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக ஜிம்பாவே நாட்டின் முன்னாள் வீரர் ஆண்டி பிளவர், நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஐபிஎல் தொடரில் இதுவரை 16 முறை பங்கேற்று ஒருமுறை கூட கோப்பையை வெல்லாததால் அந்த அணி நிர்வாகம் புதிய முயற்சி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கண்டிப்பாக ஆர்சிபி அணியை ஆண்டி பிளவர், சாம்பியன் பட்டம் பெற வைப்பார் என்று கூறப்படுகிறது.

இது குறித்து ஆர்சிபி அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆண்டி ஃபிளவர் கூறியதாவது:
நான் ஆர்சி அணியுடன் இணைவதை நினைத்து பெருமை கொள்கிறேன். 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியை புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்ல ஆவலோடு காத்திருக்கிறேன். நான் ஆர்சி அணி வீரர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது குறிப்பாக மீண்டும் டு பிளெஸியுடன் இணைந்து பணியாற்ற உள்ளது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.
நாங்கள் கடந்த காலங்களில் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளது சிறப்பானதாக இருக்கப் போகிறது. ஆர்சிபியுடன் இணைந்து மிகப் பெரிய சவாலை சந்திக்க உள்ளேன். அவர்களுடன் இணைந்து பணியாற்றும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.