டெல்லியில் 33.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது கடந்த 55 ஆண்டுகளில் பிப்ரவரி மாதத்தில் பதிவான மூன்றாவது அதிகபட்ச வெப்பநிலை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் நேற்று 33.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது கடந்த 55 ஆண்டுகளில் அதாவது 1969-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிப்ரவரி மாதத்தில் பதிவான மூன்றாவது அதிகபட்ச வெப்பநிலை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு 34.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது என்றும், இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலை 1993-ல் 33.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் நகரத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை 13.1 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. இது சராசரியை விட இரண்டு டிகிரி அதிகமாகும். காலை 8.30 மணியளவில் நகரில் ஈரப்பதம் 91 சதவீதமாக பதிவாகியுள்ளது. டெல்லியில் அதிகபட்சமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை 31.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இது பருவத்தின் சராசரியை விட ஏழு புள்ளிகள் அதிகமாகவும், இரண்டு ஆண்டுகளில் பிப்ரவரி மாதத்தில் இல்லாத அதிகபட்ச வெப்பநிலையாகவும் இருந்தது. அன்றைய தினம் நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 11.4 டிகிரி செல்சியஸாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா