முக்கியச் செய்திகள் இந்தியா

“புதிய அங்கன்வாடி மையங்களுக்கு அனுமதியளிக்கவில்லை” – மத்திய அரசு

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் புதிதாக அங்கன்வாடி மையங்கள் திறக்க அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை என மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் உள்ள மொத்த அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை தொடர்பாகவும் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக ஏதேனும் அங்கன்வாடிகள் மூடப்பட்டதா? என தி.மு.க உறுப்பினர் சண்முகம் மற்றும் ஆந்திர எம்.பி ஒருவரும் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம்,

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் புதிதாக எந்த ஒரு அங்கன்வாடி மையங்கள் திறக்க வில்லை ஆனால், ஆந்திரப் பிரதேசத்தை பொறுத்தவரை இதுவரை மொத்தம் 55,607 அங்கன்வாடி மையங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழகத்தை பொறுத்தவரை 54,439 அங்கன்வாடி மையங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேவேளையில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் எந்த ஒரு அங்கன்வாடி மையமும் மூடப்பட்டதாக மாநில அரசிடமிருந்து தகவல் தெரிவிக்கப்படவில்லை

அங்கன்வாடி ஊழியர்களுக்கு தேவையான ஊதியங்கள் முறையாக வழங்கப்பட்டு வருவதாகவும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிகட்டு காளை!

Niruban Chakkaaravarthi

15-18 வயதுடையவர்களுக்கு ஜன-3 முதல் கொரோனா தடுப்பூசி

Arivazhagan CM

அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு.

Ezhilarasan