பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

இணையவாசிகளை பொறுத்தவரை தாங்கள் வறுத்தெடுப்பதற்கு வாரத்திற்கு ஒரு கண்டெண்ட்டாவது தேவை. சினிமா, அரசியல், கலாச்சாரம், உணவு, ஊர் என எதன் பெயரிலாவது ட்ரெண்டாகும் கண்டெண்டை பிடித்துக்கொண்டு அந்த வாரம் முழுவதும் பொழுதுபோக்குவது நெட்டிசன்களின் வாடிக்கை.…

இணையவாசிகளை பொறுத்தவரை தாங்கள் வறுத்தெடுப்பதற்கு வாரத்திற்கு ஒரு கண்டெண்ட்டாவது தேவை. சினிமா, அரசியல், கலாச்சாரம், உணவு, ஊர் என எதன் பெயரிலாவது ட்ரெண்டாகும் கண்டெண்டை பிடித்துக்கொண்டு அந்த வாரம் முழுவதும் பொழுதுபோக்குவது நெட்டிசன்களின் வாடிக்கை. அப்படி எந்த கண்டெண்டுக்கும் கிடைக்காத பட்சத்தில் அவர்களாக ஒரு கண்டெண்டை உருவாக்கி ட்ரால் செய்து ட்ரெண்ட் செய்துவிடுவார்கள். சில சமயங்களில் தங்களுக்கு உடன்பாடே இல்லையென்றாலும் யாராவது சிக்கினால் கூட்டத்தோடு கூட்டமாக சென்று ட்ரால் செய்து கடமையை ஆற்றிக்கொள்வார்கள் இணைய வாசிகள்.

அந்த வகையில் இந்த வாரம் இணையவாசிகளிடம் சிக்கிய பொருளாதார நிபுணர் தான் ஆனந்த் ஸ்ரீநிவாசன். தொலைக்காட்சி விவாதங்களில் அரசியல் மற்றும் பொருளாதார நிபுணராக கலந்துகொண்டு பல்வேறு கருத்துக்களை எடுத்துவைக்கும் இவர் கடந்த சில ஆண்டுகளாகவே சேமிப்பின் அவசியத்தை பற்றியும் தேவையை பற்றியும் இளைஞர்களுக்கு யூ-டியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் எடுத்துரைப்பதோடு வயது வாரியாக அதற்கான திட்டமிடலையும் கூறிவருகிறார். ஒரு பேட்டியில் நிருபரை பார்த்து உன்னோட சம்பளம் எவ்வளவு என்று கேட்டவரே பேப்பரையும் பேனாவையும் எடுத்து அவர் மாதம் எவ்வளவும் செலவு செய்யலாம், எதெற்கெல்லாம் செலவு செய்யலாம், எதில் சேமிக்கலாம் எவ்வளவு சேமிக்கலாம் என்பதை பட்டியல் போட்டு கொடுத்தார். இதை தொடர்ந்து 10 ஆயிரத்தில் இருந்து 10 லட்சம் வரை சம்பாதிக்கும் பெரும்பாலானோர்கள் ஆனந்த் ஸ்ரீனிவாசனின் ஐடியாக்களுக்காக தவமிருக்க தொடங்கினர்.

“மாதம் 25 ஆயிரம் சம்பாதிக்கும் உனக்கு நெட்ஃபிலிக்ஸ் எதற்கு? வாரம் ஒரு சினிமா எதற்கு? அதான் யூ-டியூப்-இல் இலவசமாக பல படங்களும் நிகழ்ச்சிகளும் வருகிறதே!!அதைப்பார்த்துக்கொள்ளலாமே” போன்ற அதிரடியான பல கேள்விகளை கேட்டு இளைஞர்களை உலுக்கி எடுத்தார். 21 வயதிற்கு மேல் சேமிப்பை தொடங்கவில்லை என்றால் 30 வயதில் வாழ்க்கையில் எப்படியெல்லாம் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட வேண்டி வரும் என்பதை மிக ஆணித்தரமாக எடுத்து வைக்கும் இவர் முறையான சம்பளமும் சேமிப்பும் இல்லை என்றால் திருமணம் செய்யாதீர்கள், வாகனம் வாங்காதீர்கள் என்று அடித்து கூறுகிறார். சென்னையில் வீடு வாங்க வேண்டும் என்பதே இங்கு வேலை செய்யும் 90 சதவீத மக்களின் லட்சியக்கணவாக இருக்கும் போது லோன், ‘இ.எம்.ஐ போட்டு வீடு வாங்குறதுலாம் வேஸ்ட்.. மொத்தமா காசு இருந்தா வேணும்னா வீடு வாங்குறது பத்தி யோசிங்க.. இல்லேன்னா பரவால்ல ஜாலியா வாடகை வீட்ல இருங்க’ என்று காத்துவாக்குல பல கருத்துக்களையும் வாரித்தூவி வருகிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

இந்நிலையில் கண்டெண்ட் இல்லாமல் கடந்த திங்கள் முதல் தவித்துக்கொண்டிருந்த இணையவாசிகளுக்கு ஆனந்த் ஸ்ரீனிவாசன் போல ஒரு சேமிப்பு திட்டத்தை ‘ட்ரால்’ வடிவில் இளைஞர் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதை கப்பென்று பிடித்த நெட்டிசன்கள் தங்களின் கற்பனை வரிக்குதிரை கிளப்பி அடித்து நொறுக்கி வருகின்றனர். படம் ஒன்றில் பீச் ஓரமாக விஜய் தியானம் செய்துகொண்டிருக்கும் படத்தில் ஆனந்த் ஸ்ரீநிவாசனின் போட்டோவை ஒட்டி, ‘இங்க செலவு பண்ணி வந்து தியானம் பன்றதுக்கு வீட்லையயே தியானம் பண்ணா அந்த காசு மிச்சம் படுத்தி வருங்காலத்துல நல்லா இருக்கலாம்ல’ என்று கேப்ஷன் போட்டு ட்ரெண்ட் செய்கின்றனர். இதேபோல் பல டெம்ப்ளேட்டுகளை உருவாக்கி கடந்த ஒரு வாரமாக ஆனந்த் ஸ்ரீனிவாசனை சிலர் கண்டெண்ட் ஆக்கி வந்தாலும் இன்னும் பலர் அவருக்கும் அவரின் கருத்துக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆனந்த் ஸ்ரீநிவாசனின் பேட்டியை பார்த்த பலருமே அப்போதிலிருந்தான் மாதத்தில் தாம் எவ்வளவு செலவு செய்கின்றோம், எதற்கு செலவு செய்கின்றோம் என்பதை பட்டியல் போடத்தொடங்கினார்கள். சேமிப்பின் முக்கியத்தை புரிந்துகொண்டதோடு செலவுகளை குறிப்பதன் தேவையும் உணந்துகொண்டதாக இளைஞர்கள் பலரும் கூறுவதை பார்க்கமுடிகிறது. முறையான சேமிப்பும் கட்டுப்பாடான செலவீனங்களையும் கடைப்பிடிக்காததால் இளைஞர்கள் பலரும் பல்வேறு துன்பத்துக்கு ஆளவதோட இளம் வயதிலேயே மன அழுத்தத்திற்கும் தொடர் கவலைகளுக்கும் உள்ளாதவாக பலரும் கூறுகின்றனர். சேமிப்பு என்பது ஆதிகாலம் தொட்டே ஏன் நாம் மனிதனாக பரிணமிக்கும் முன்பிருந்தே நம்மிடம் இருந்த மிக அத்தியாவசிய பழக்கம் ஆகும். அதற்கு வழிகாட்டும் ஒருவரை வெறும் கண்டெண்டிற்காக கட்டுப்பாடுகள் அற்று கலாய்ப்பது சரியாக இல்லை என்றும் ஆனந்த் ஸ்ரீநிவாசனின் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.