காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. பளுதுாக்குதலில் இந்திய வீரர் சங்கீத் மகாதேவ் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆண்களுக்கான 55 கிலோ பளுதுாக்குதல் போட்டியில், இந்தியா சார்பில் சங்கீத் மகாதேவ் பங்கேற்றார். மூன்று முறை தேசிய சாம்பியன் ஆன இவர் முதன் முறையாக காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றார்.
முதலில் ‘ஸ்னாட்ச்’ பிரிவில் அதிகபட்சமாக 113 கிலோ துாக்கி மஹாதேவ் முதலிடம் பெற்றார்.
அடுத்ததாக ‘கிளீன் அண்டு ஜெர்க்’ பிரிவில் முதல் வாய்ப்பில் 135 கிலோ துாக்கிய மஹாதேவ், அடுத்ததாக 139 கிலோ எடையை துாக்க முயன்று தோல்வி அடைந்தார். வலது முழங்கையில் காயம் ஏற்பட்டதால், அவரால் மூன்றாவது வாய்ப்பில் துாக்க முடிவில்லை.
ஒட்டுமொத்தமாக மஹாதேவ் 248 கிலோ துாக்கினார்.
ஒட்டுமொத்தமாக 249 கிலோ தூக்கிய மலேசிய வீரர் முகமது அனிக், தங்கம் வென்றார். மஹாதேவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 225 கிலோ துாக்கிய இலங்கையின் திலங்கா இஸ்ரு குமாரா வெண்கலம் வென்றார்.








