முக்கியச் செய்திகள் உலகம்

நேபாளத்தில் குடியரசு தலைவர் ஆட்சி!

நேபாள நாடாளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு குடியரசுத் தலைவர் பிந்தியா தேவி பண்டாரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் அந்நட்டில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

நேபாள நாடாளுமன்றம் 271 உறுப்பினர்களை கொண்டது. பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி கே.பி. ஷர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு ஆட்சி அமைத்தது. ஷர்மா ஒலியின் அரசுக்கு அளித்த ஆதரவை, மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரும்ப பெற்றதால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

வாக்கெடுப்பில் ஷர்மா ஒலி அரசு தோல்வி அடைந்த நிலையில் எதிர்கட்சிகள் ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் கெடு வழங்கினார். ஆனால் ஆட்சியமைக்க எதிர்க்கட்சிகளால் இயலாததால் வரும் நவம்பர் 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் குடியரசுத் தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதேபோல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ம் தேதி நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. பின்னர் இந்த ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி ஷர்மா ஒலி தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைக்கப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நேபாளத்தில் குடியரசு ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

Advertisement:

Related posts

பட்டியலினத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர் பிரிவு நீக்கமா? மத்திய அரசு விளக்கம்!

Nandhakumar

தெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்!

Saravana Kumar

மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை; ஜெ.பி.நட்டா நம்பிக்கை

Saravana Kumar