#NEET பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் | மாணவர் விடுதி மூடல்…

நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதாக வெளியான வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து அகாடமியின் தங்கும் விடுதிகள் உரிமம் இன்றி செயல்படுவதாக புகார் எழுந்த நிலையில் தங்கும் விடுதிகள் மூடப்பட்டன.…

Nellie #NEET Coaching Center Students Assault Case | Closure of student hostels operating without permission…

நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதாக வெளியான வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து அகாடமியின் தங்கும் விடுதிகள் உரிமம் இன்றி செயல்படுவதாக புகார் எழுந்த நிலையில் தங்கும் விடுதிகள் மூடப்பட்டன.

நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே ஜல் நீட் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 80 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சி மையத்தை கேரளாவை சேர்ந்த ஜவாலுதீன் அகமது வெட்டியாளன் என்பவர் நடத்தி வருகிறார். இவர், மாணவர்களை மூங்கில் பிரம்பால் அடித்தும், மாணவிகள் காலணிகளை முறையாக கழட்டிவிட்டு வராமல் இருந்ததால் காலனிகளை கொண்டு எறிந்ததாகவும் வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நெல்லை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் நடைபெற்ற நீட் அகாடமிக்கு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர், அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் மனித உரிமை மீறல் நடந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவ மாணவிகள் இரண்டு விடுதிகளில் தங்கி இருந்தனர். ஆய்வில், விடுதி செயல்பட சமூக நலத்துறையிடம் அனுமதி பெறவில்லை என தெரிய வந்துள்ளது. இதனால் சமூக நலத்துறை தகுந்த காரணம் காட்டி கோரி பயிற்சி மையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

விடுதி கட்டிடத்தின் உரிமையாளர் உடனடியாக விடுதியை காலி செய்ய கூறிய நிலையில் மாணவ மாணவிகள் விடுதியை காலி செய்தனர். ஆனால், பயிற்சி மையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பயிற்சி மையம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி மாணவ மாணவிகளின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். காவல்துறை பயிற்சி மையத்தின் உரிமையாளரை தேடி வரும் நிலையில் அவர் சிக்கவில்லை. தொடர்ந்து தேடுதல் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.