தென்கொரியாவில் நடைபெற்ற ரிலே ஓட்டப்பந்தயத்தில், நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்த கல்லூரி மாணவி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் மரியதேவசேகர். இவர்
அப்பகுதியில் உள்ள தெரசா மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். விளையாட்டுத் துறையில் ஆர்வம் உள்ள மாணவ மாணவிகளுக்கு பயிற்சியும் ஊக்கமும் அளித்து அவர்களது முன்னேற்றத்திற்காக வழிகாட்டுதலாக இருந்து வருகிறார்.
இதர மாணவர்களை போன்று அவரது மகளான கனிஸ்டா டினாவிற்கும் விளையாட்டின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக பயிற்சியும் ஊக்கமும் அளித்துள்ளார். கனிஸ்டா டினா கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
கனிஷ்டா டினாவும் தந்தையின் உத்வேகத்தால் பல கட்ட பயிற்சிகளை மேற்கொண்டு தென்கொரியாவில் நடைபெற்ற உலக அளவிலான ரிலே போட்டியில் பங்கு பெற்றார். அவருடன் தமிழகத்தைச் சேர்ந்த கூடுதல் பங்களிப்பாக 4 பேர் கலந்துகொண்டு போட்டியை சந்தித்தனர்.
இவர்களில் கனிஷ்டா டினா ரிலே ஓட்டத்தில் முதலிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றி வெற்றி பெற்றார். உலக அளவில் தங்கப்பதக்கம் வென்ற கனிஷ்கா டினாவிற்கு சென்னையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கவுரவப்படுத்தி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.
ரூபி.கா







