“நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது” – உச்சநீதிமன்றம்

நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  நடந்து முடிந்த நீட் தேர்வில் விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி  மற்றும் வினாத்தாள் கசிவு என  பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த…

நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

நடந்து முடிந்த நீட் தேர்வில் விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி  மற்றும் வினாத்தாள் கசிவு என  பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில்,  நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று பலரும் உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்து வருகிறார்கள்.

மேலும்,  குறிப்பாக அண்மையில் பிரபல கல்வி தொழில்நுட்ப நிறுவன தலைவர் அலக் பாண்டே என்பவருடைய தரப்பில்  இருந்து உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 1,500-க்கும் அதிகமானோருக்கு கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிராக மனு தாக்கல் செய்து இருந்தார்.  இந்த மனு ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன்பே விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை ஜூன் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து,  இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு இந்த மனு வந்தது.  அப்போது, நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கு, வருகின்ற ஜூன் 23-ஆம் தேதி மறு தேர்வு நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  மேலும்,  மறு தேர்வு எழுத விரும்பாத மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் இல்லாமல் மதிப்பெண்கள் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும்,  நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள் கலந்தாய்வை தொடர்ந்து நடத்த உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.