விக்கிரமசிங்கபுரம் அருகே இல்லம் தேடி கல்வி இயக்கம் சார்பாக தண்ணீர் பந்தல்!

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் இல்லம் தேடி கல்வி இயக்கம் சார்பாக 70க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அம்பாசமுத்திரம் நகராட்சி, 13 கிராம பஞ்சாயத்துகளில் 128…

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் இல்லம் தேடி கல்வி இயக்கம் சார்பாக 70க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அம்பாசமுத்திரம் நகராட்சி, 13 கிராம பஞ்சாயத்துகளில் 128 மையங்கள் மற்றும் 83 உயர் தொடக்க நிலை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.  இதில் 3871 மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில் இந்த மையங்களின் சார்பாக, ஆறுகளை தூய்மைப்படுத்துதல், நூலகங்களின் புதிய உறுப்பினர்களை சேர்த்து பாரதியார் விழா, திருக்குறள் விழா என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா்.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் அம்பாசமுத்திரம் ஒன்றிய பகுதி இல்லம் தேடி கல்வி சார்பில் 70 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

—-ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.