கணவருடன் தகராறு: இரு குழந்தைகளை கொன்றுவிட்டு உயிரிழப்பு செய்து கொண்ட மனைவி

மணப்பாறை அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில், எலி மருந்து பிஸ்கட்டை கொடுத்து இரு குழந்தைகளை கொன்றுவிட்டு, தாயும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொன்னம்பலத்தான்பட்டியை சேர்ந்தவர்…

மணப்பாறை அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில், எலி மருந்து பிஸ்கட்டை கொடுத்து இரு குழந்தைகளை கொன்றுவிட்டு, தாயும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொன்னம்பலத்தான்பட்டியை சேர்ந்தவர் நித்யா. இவருக்கும், வரதக்கோன்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருந்த நிலையில், கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த நித்யா, இரு குழந்தைகளுக்கும் எலி மருந்து பிஸ்கட்டை சாப்பிட கொடுத்துவிட்டு, தானும் சாப்பிட்டுள்ளார். இதையடுத்து மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக நித்யாவின் தந்தை அளித்த புகாரின்பேரில், மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தியபோது, நித்யாவின் மரண வாக்குமூலக் கடிதம் கிடைத்தது. அதில், தனது இறப்புக்கு காரணம், கணவர் முருகேசனும், அவரது சகோதரியும் தான் என நித்யா குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில், முருகேசன் அவரது சகோதரி செல்லமணி ஆகியோரை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது உயிரிழப்புக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.