சசிகலாவுக்கு ஆதரவாக பெரியகுளத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்

அதிமுகவுக்கு தலைமையேற்க சசிகலாவுக்கு அழைப்பு விடுத்து பெரியகுளத்தில் ஒட்டப்பட்ட  போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   அதிமுக நிர்வாகிகளுடன் மற்றும் தொண்டர்களுடன் சசிகலா பேசும் ஆடியோ அண்மைக் காலமாக தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதனால் சசிகலாவுடன் தொடர்பில் இருந்து வரும் அதிமுகவினரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம்,…

அதிமுகவுக்கு தலைமையேற்க சசிகலாவுக்கு அழைப்பு விடுத்து பெரியகுளத்தில் ஒட்டப்பட்ட  போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

அதிமுக நிர்வாகிகளுடன் மற்றும் தொண்டர்களுடன் சசிகலா பேசும் ஆடியோ அண்மைக் காலமாக தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதனால் சசிகலாவுடன் தொடர்பில் இருந்து வரும் அதிமுகவினரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கி வருகின்றனர்.

எனினும், சசிகலா அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டுமென வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.   ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் பகுதியில்   “அதிமுக கழகத்தை வழிநடத்த வருகை தரும் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களே வருக வருக  என வரவேற்கிறோம்” உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.  அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரில் சசிகலாவை வரவேற்று ஒட்டப்பட்ட போஸ்டர் அதிமுகவினரிடையே விவாதத்தை உண்டாக்கியுள்ளது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.