NCL 2023: மதுரையில் நடைபெற்ற போட்டியில் பி.எஸ்.என்.ஏ கல்லூரியை 121 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சௌராஷ்டிரா அணி வெற்றி!

மதுரையில் நடைபெற்ற போட்டியில் பி.எஸ்.என்.ஏ கல்லூரியை 121 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சௌராஷ்டிரா அணியினர் வெற்றி பெற்றனர். நமது நியூஸ் 7 தமிழ் ஸ்போர்ட்ஸ் சேனல் சார்பாக மதுரை அருகே உள்ள போட்டப்பாளையம் கே.எல்.என்…

மதுரையில் நடைபெற்ற போட்டியில் பி.எஸ்.என்.ஏ கல்லூரியை 121 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சௌராஷ்டிரா அணியினர் வெற்றி பெற்றனர்.

நமது நியூஸ் 7 தமிழ் ஸ்போர்ட்ஸ் சேனல் சார்பாக மதுரை அருகே உள்ள போட்டப்பாளையம் கே.எல்.என் பொறியியல் கல்லூரி மைதானத்தில் கல்லூரிகளுக்கிடையேயான டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் 3 வது நாள் நடைபெற்ற 6 வது போட்டியில் சௌராஷ்டிரா கல்லூரி அணியும் பி.எஸ்.என்.ஏ கல்லூரி அணியினரும் மோதினர். டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சௌராஷ்டிரா கல்லூரி அணியினர் 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை எடுத்தனர். இதில் அந்த அணியைச் சேர்ந்த சந்தோஷ் 62 பந்துகளில் 103 ரன்களை எடுத்து ஆட்டம் இழக்காமல் விளையாடினார்.

அதனைத் தொடர்ந்து 177 ரன்கள் என்கிற இலக்குடன் களம் இறங்கிய பி.எஸ்.என்.ஏ கல்லூரி அணியினர் 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் எடுத்து 121 ரன் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தனர்.

இந்த போட்டியில் வெற்றியைச் சந்தித்த சௌராஷ்டிரா அணியைச் சேர்ந்த சந்தோஷ் சிறந்த ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டதுடன் அவருக்கு நமது நியூஸ் 7 தமிழ் சார்பாக அவருக்குக் கோப்பையும் வழங்கப்பட்டது. ஆட்ட நாயகன் சந்தோஷிற்கு விருதினை ஆட்ட நடுவர்கள் வழங்கினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.