NCL 2023 : நெல்லை அரசு பொறியியல் கல்லூரி அணிக்கு எதிரான ஆட்டத்தில், தூத்துக்குடி வாகைகுளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரி வெற்றி!

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தூத்துக்குடி வாகைகுளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரி அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூஸ்7 தமிழ் சார்பில் கிரிக்கெட் போட்டிகள்…

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தூத்துக்குடி வாகைகுளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரி அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூஸ்7 தமிழ் சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த டி20 கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் பிற்பகல் ஆட்டத்தில் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி அணியும் தூத்துக்குடி வாகைகுளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரி அணியும் களம் கண்டது.

டாஸ் வென்ற தூத்துக்குடி வாகைகுளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரி அணியின் கேப்டன் சஜுன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் கேப்டன் சஜுன் மற்றும் மாரி ஹரிஷ் ஆகிய இரண்டு பேரும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கினர். தொடக்க ஆட்டக்காரர் மாரி ஹரிஷ் 5 பந்துகளை எதிர்கொண்டு ரன் எதுவும் இன்றி ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இதனை எடுத்து கேப்டன் சஜுன் உடன் ஜோடி சேர்ந்த மல்லி சாரதி இருவரும் நிதானமாக ரன்கொவித்தனர் 32 ரன்கள் எடுத்திருந்த வள்ளி சாரதி விஜய் பந்து விசில் ஆட்டம் இழந்து வெளியேறினார் அதன் பின்னர் களம் டேனி கேப்டன்னுடைய இணைந்து சிறிது நேரம் களம் கண்டால் இதனிடையே அணியின் கேப்டன் சஜுன் 37 பந்துகளில் நான்கு பவுண்டரி உட்பட 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இதனை அடுத்து டேனி 15 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் வெகுவாக உயர இறுதி கட்டத்தில் உதவினார் இதனால் 20 ஓவர் முடிவில் தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. அரசுப் பொறியியல் கல்லூரி அணியின் பந்துவீச்சை பொறுத்த வரையில் நெல்சன் மூன்று ஓவர்கள் பந்துவீசி 16 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதே போன்று அந்த அணியில் வசந்த் நான் ஓவர்கள் பந்து வீசி 19 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆண்டோ அருண் ஆகிய இரண்டு பேரும் களமிறங்கினர்.

மூன்று பண்புகளை எதிர்கொண்ட ஆண்டு ரன் எதுவும் இன்றி தொடக்கத்திலேயே விக்கட்டை இழந்த நிலையில் அதன் பின்னர் அந்த அணியின் கேப்டன் ஹரிசங்கர் அதிரடியாக ஆடினார் ஒன்பது பந்துகளில் இரண்டு பவுண்டரி ஒரு சிக்ஸர் உடன் 16 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.

தொடர்ந்து சீரான இடைவெளியில் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி அணி வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர் இதனால் அந்த அணி 14.5 ஓவர்கள் 99 ரன்கள் மட்டும் எடுத்து வெற்றி வாய்ப்பை இழந்தது இதன் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரி அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இதன் மூலம் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மதர் தெரசா பொறியியல் கல்லூரி அணி தனது அடுத்த சுற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தி கொண்டுள்ளது. வந்து பிச்சை பொறுத்த வரையில் மதர் தெரசா கல்லூரி அணியின் கேப்டன் சஜுன் மூன்று விக்கெட்டுகளையும் சதீஷ் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இந்த போட்டியில் 35 ரன்கள் எடுத்ததுடன் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்திய தூத்துக்குடி மதர் தெரசா பொறியியல் கல்லூரி அணியின் கேப்டன் சஜுன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.