NCL 2023 : திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியை வீழ்த்தி, பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி வெற்றி

சேரன்மகாதேவியில் நியூஸ் 7 தமிழ் ஸ்போர்ட்ஸ் நடத்தும் மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூஸ் 7…

சேரன்மகாதேவியில் நியூஸ் 7 தமிழ் ஸ்போர்ட்ஸ் நடத்தும் மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் மைதானத்தில் இன்று நடைபெற்ற நியூஸ் 7 தமிழ் கிரிக்கெட் லீக் தொடரின் 3வது நாள் லீக் போட்டியில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி அணியும், பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி அணியும் மோதின.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் நவீன் ஜோ அதிகபட்சமாக 43 ரன்களும், விஜய் 39 ரன்களும் எடுத்தனர். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி அணி தரப்பில் கோகுல நவீன் அதிகபட்சமான 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி அணி 16.2 ஓவர்களில் 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெற்றி வாய்ப்பை இழந்தது. அந்த அணி தரப்பில் அரவிந்த் விஷ்ணு அதிகபட்சமாக 23 ரன்கள் எடுத்தார்.

பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி அணி தரப்பில் நவீன் ஜே அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், சதீஷ்குமார் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 43 ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகளை எடுத்த பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி அணி வீரர் நவீன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.