கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கும்- தொல்லியில் துறை

கீழடியில் எப்ரல் முதல் வாரத்தில் 9ம் கட்ட அகழாய்வு தொடங்கும் என தமிழக தொல்லியல்துறை தகவல் சிவகங்கை மாவட்டம் கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி நிறைவடைந்தது. 2…

கீழடியில் எப்ரல் முதல் வாரத்தில் 9ம் கட்ட அகழாய்வு தொடங்கும் என தமிழக
தொல்லியல்துறை தகவல்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு கடந்த ஆண்டு அக்டோபர் 22ம்
தேதி நிறைவடைந்தது. 2 ஏக்கர் நிலப்பரப்பளவில் கீழடியில் 9 ஆம் கட்ட அகழாய்வு செய்ய தொல்லியல்த்துறை திட்டமிட்டு உள்ளது. கீழடியில் 9 ஆம் கட்ட அகழாய்வு செய்யப்படும் இடத்தை தமிழக தொல்லியல்த்துறை பணியாளர்கள் சுத்தம் செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர்.

9ம் கட்ட அகழாய்வு ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என தமிழக தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளது, கீழடி, அகரம், கொந்தகை என 3 இடங்களில் 9ம் கட்ட அகழாய்வு செய்ய  திட்டமிடப்பட்டுள்ளது.

8ம் கட்ட அகழாய்வில் 20 குழிகள் தோண்டப்பட்டு நீள் வடிவ தாயக்கட்டை, சுடுமண் பொம்மை, உறைகிணறுகள், இரு வண்ண பானைகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன, இவற்றில், சுடுமண்ணால் உருவாக்கப்பட்ட பெண்ணின் முகம், உறைகிணறுகள் எனக் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பொருள்கள் கிடைத்தன.

அதே போல் கொந்தகை அகழாய்வு தளத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. இவற்றிலிருந்து மனித மண்டை ஓடுகள், எலும்புகள், மண் குவளைகள், சூதுபவளங்கள், கண்ணாடி மணிகள், பாசி மணிகள், இரும்பால் செய்யப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டறியப்பட்டன. அகரத்தில் அதிமாக உறைகிணறுகள், செங்கல் கட்டுமானங்கள் காணப்பட்டன.

இந்நிலையில் தமிழர்களின் பழம்பெருமையை வெளிக் கொணரும் விதமாக
கீழடியில் 9 ஆம் கட்ட அகழாய்வு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க ஏற்பாடுகள்
செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.