NCL 2023 : கோவை JCT பொறியியல் கல்லூரியை வீழ்த்தி, இரத்தினம் கலை, அறிவியல் கல்லூரி அபார வெற்றி

என்.சி.எல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில், JCT பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வெற்றி பெற்றது. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி…

என்.சி.எல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில், JCT பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வெற்றி பெற்றது.

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கோவை மண்டலத்தில், இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி, JCT பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணியுடன் மோதியது.

இதையும் படியுங்கள் : NCL 2023 : ஶ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமத்தை வீழ்த்தி பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி அபார வெற்றி

இதில் டாஸ் வென்ற JCT பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி, 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் எடுத்தது. இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ரஞ்சித் 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கோவை இரத்தினம் கல்லூரி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜோடி, பொறுப்புடன் விளையாடி 30 பந்துகள் மீதம் இருக்கையில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசிய இரத்தினம் கல்லூரியின் ரஞ்சித் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.