சூர்யாவின் 43வது படத்தில் பிரபல நடிகை நஸ்ரியா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா தற்போது ‘கங்குவா’ படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். சூர்யாவின் 43ஆவது படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார்.
ஜி.வி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மீண்டும் இக்கூட்டணி இணைய உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், சூர்யா 43 படத்தில் நடிகர் துல்கர் சல்மான் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
தற்போது, இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, அதிதி ஷங்கரை நாயகியாக்க படக்குழு முடிவு செய்திருந்ததாக தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.







