நயன்தாரா நடிக்கும் 75வது படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.
ZEE Studios, Trident Arts and Naad Sstudios இணைந்து தயாரிக்கும், நடிகை நயன்தாராவின் புதிய திரைப்படம் லேடி சூப்பர்ஸ்டார் 75, இன்று காலை (ஜூலை 12) எளிமையான பூஜையுடன் துவங்கப்பட்டது. ஏறக்குறைய 2 தசாப்தங்களாக திரைத்துறையில் கோலோச்சும், நடிகை நயன்தாராவின் 75வது படமாக இப்படம் உருவாகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மிக கடின உழைப்பினாலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பினாலும், மிகச்சிறந்த நடிகையாக திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக ஜெட் வேகத்தில் முன்னேறியுள்ளார் நடிகை நயன்தாரா. ஹோரோயின்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைக்கதைகளை தேர்வு செய்து நடிக்கும் அவரது பாணி ரசிகர்களை மட்டுமல்ல திரைப்பிரபலங்களையும் ஈர்த்துள்ளது. கிட்டத்தட்ட இருபது ஆண்டு காலம் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை அவர் தொடர்ந்து மகிழ்வித்துள்ளார்.
நடிகை நயன்தாரா இப்போது தனது மைல் கல்லான 75வது படத்தில் அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ZEE Studios, Trident Arts and Naad Sstudios இணைந்து தயாரிக்கும், இந்த புதிய படத்திற்கு தற்காலிகமாக லேடி சூப்பர்ஸ்டார் 75 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் ஒரு எளிமையாக நடைபெற்றது.
இப்படத்தில் சத்யராஜ், ஜெய், ரெடின் கிங்ஸ்லி முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜாக்கி கலை இயக்குனராகவும், பிரவீன் ஆண்டனி எடிட்டிங் பணிகளும் மேற்கொள்கின்றனர்.
– தினேஷ் உதய்