முக்கியச் செய்திகள் சினிமா

போயஸ் கார்டனில் வீடு வாங்கிய லேடி சூப்பர் ஸ்டார்

நடிகை நயன்தாரா போயஸ் கார்டனில் பிரமாண்ட வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என நடித்து வரும் அவர் ஆறு கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இப்போது, காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட், டிரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் படம் உட்பட சில படங்களில் நடிக்கும் நயன்தாரா, அட்லீ இயக்கும் படம் மூலம் இந்திக்கும் செல்கிறார். இந்தப் படங்களின் ஷூட்டிங் முடிந்ததும் காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது.

இந்நிலையில், நடிகை நயன்தாரா, போயஸ் கார்டனில் பிரமாண்ட வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ், இயக்குநர் அட்லீ, விஜய் ஆண்டனி உட்பட சில சினிமா பிரபலங்கள் அங்கு வீடு வாங்கியுள்ள நிலையில், நடிகை நயன் தாராவும் அங்கு 4 பெட்ரூம் கொண்ட 2 வீடுகளை வாங்கி இருக்கிறார். நல்ல நாள் பார்த்து அந்த வீட்டுக்கு  குடிபெயர இருப்பதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் தனது 37 வது பிறந்த தினத்தை ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ பட செட்டில் கொண்டாடிய நடிகை நயன்தாராவுக்கு ரசிகர்கள், திரைத்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர். பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை நடிகை சமந்தா சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

லாட்டரி விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு நிதி அமைச்சர் கண்டனம்

Gayathri Venkatesan

மண்ணுளிப்பாம்பை கடத்திய மூவர் கைது!

Vandhana

சென்னை அழைத்து வரப்பட்ட ஏடிஎம் கொள்ளை கும்பலின் தலைவன்

Gayathri Venkatesan