முக்கியச் செய்திகள் சினிமா

முன்னாள் மாமனார் நாகார்ஜுனா ஸ்டூடியோவுக்கு சமந்தா சென்றது ஏன்?

நடிகை சமந்தா, முன்னாள் மாமனார் நாகார்ஜுனாவின் அன்னபூர்ணா ஸ்டூடியோவுக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை சமந்தா, தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். பிரபல தெலுங்கு ஹீரோ நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை அவர் காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். சுகமாக சென்றுகொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில், திடீரென கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இது தமிழ், தெலுங்கு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமந்தா, இப்போது தெலுங்கு, தமிழில் உருவாகும் ’சாகுந்தலம்’, விக்னேஷ் சிவன் இயக்கும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் ’புஷ்பா’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இந்திப் படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகி உள்ள அவர், இப்போது ஆங்கில படத்தில் நடிக்க இருக்கிறார்.

திமேரி என் முராரியின், ’அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ்’ என்ற நாவலின் கதையை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தை பிலிப் ஜான் இயக்குகிறார். இவர் Downton Abbey என்ற படத்தை இயக்கியவர். இந்தப் படத்தில் தமிழ்ப் பெண்ணாக வரும் சமந்தா, இருபாலின ஈர்ப்பாளராக நடிக்க இருக்கிறார். படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் சுனிதா ததி தயாரிக்கிறார். இவர் தெலுங்கில் சமந்தா நடித்த ’ஓ பேபி’ படத்தை தயாரித்தவர் ஆவார்.

இந்நிலையில், தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டூடியோவுக்கு நடிகை சமந்தா சென்றார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் ஏன் அங்கு சென்றார் என்று ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வந்தனர். குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள ’சாகுந்தலம்’ படத்தின் டப்பிங் பணிகள் அங்கு நடந்து வருகிறது. இதற்காக நடிகை அங்கு சென்றதாக சமந்தாவுக்கு வேண்டியவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

சீனாவில் நிலநடுக்கம்: 3 பேர் உயிரிழப்பு!

Hamsa

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாட்டம்

Halley Karthik

எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்டவிதிகளை, அழிந்துவிடாமல் காப்பதே, முதல் கடமை – வி.கே. சசிகலா

Arivazhagan CM