ஊரக உள்ளாட்சித் தேர்தல்; 9 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிப்பு

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கு, வருகிற 6 மற்றும் 9ஆம் தேதிகளில் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்…

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கு, வருகிற 6 மற்றும் 9ஆம் தேதிகளில் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், 23 ஆயிரத்து 998 பதவிகளுக்கு 79 ஆயிரத்து 433 பேர் போட்டியில் உள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பொது விடுமுறை அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

28 மாவட்டங்களில் விடுபட்ட ஊராட்சி பதவிகளுக்காக தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 9-ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது பூத்சிலிப் இல்லாத வாக்காளரை திருப்பி அனுப்பக்கூடாது என வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. பொது தேர்தலில் அனுமதிப்பதை போல், 14 மாற்று ஆவணங்களில் ஒன்றை வைத்து வாக்களிக்க அனுமதிக்கவும் திட்டமிட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.