இலங்கையில் நாடு தழுவிய மின் தடை!

இலங்கையில் நாடு தழுவிய அளவில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையில் இலங்கை மின்சார சபை (CEB) முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. லங்கையில் கடந்த 2022-ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால்…

இலங்கையில் நாடு தழுவிய அளவில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையில் இலங்கை மின்சார சபை (CEB) முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

லங்கையில் கடந்த 2022-ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதன் காரணமாக மக்கள் 10 மணி நேர மின்தடையை எதிர் கொண்டனர். அத்துடன் எரிபொருள் விநியோகத்திற்கு பணம் செலுத்த முடியாததால் பெட்ரோலை சேமிப்பதற்காக ஒரு மில்லியனுக்கும் அதிகமான அரசு ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு மின் ஒழுங்குமுறை அதிகாரி உத்தரவிட்டார்.

https://twitter.com/aprajitanefes/status/1733520514256425117

அந்நியச் செலாவணி கையிருப்பு 70 சதவீதம் வீழ்ச்சியடைந்து மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை தற்போது மீண்டு வந்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் நாடு தழுவிய அளவில் இன்று மின்தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இணைய சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. சிஸ்டம் கோளாறால் இலங்கை முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தனர்.

மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையில் இலங்கை மின்சார சபை முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.