தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, விளையாட்டு ஆர்வலர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “விளையாட்டை விரும்பும் ஒவ்வொருவருக்கும், உங்களது அர்ப்பணிப்பு, ஆர்வம், மன உறுதி ஆகியவை அனைவரையும் பெருமிதம் கொள்ள செய்கின்றன.
மேலும், தனது திறமையால் பல தலைமுறையினருக்கு உத்வேகம் அளித்து வரும் சாதனையாளர் மேஜர் தயான் சந்த்க்கும் மரியாதை செலுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




