முக்கியச் செய்திகள் இந்தியா

அக்னிபாத் ஒரு தொலைநோக்குத் திட்டம்: அஜித் தோவல்

அக்னிபாத் ஒரு தொலைநோக்குத் திட்டம் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள அவர், ஆழமாக பார்க்க வேண்டிய ஒரு திட்டம் அக்னிபாத் என குறிப்பிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அக்னிபாத் திட்டம் தனியான திட்டம் அல்ல என கூறிய அவர், இது பல துறைகளில் பின்னிப் பிணையக் கூடியது என்றார்.

2014ல் நரேந்திர மோடி பிரதமரானபோது அவர் முன் இருந்த மிகப் பெரிய சவால் நாட்டின் பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவது; அதனை எவ்வாறு வலுப்படுத்துவது என்பதுதான் என தெரிவித்த அஜித் தோவல், இதற்கு பல்வேறு வகையான உத்திகளும் நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றன என குறிப்பிட்டார்.

விரிவாகப் பேச வேண்டுமானால், ஆயுதங்கள், அமைப்பு மாற்றம், தொழில்நுட்ப மாற்றம், மனிதவள மாற்றம், கொள்கை மாற்றம் ஆகிய மாற்றங்கள் இதற்குத் தேவைப்படுகின்றன என தெரிவித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஏனெனில் தற்போது போர் முறை என்பதே முழுமையாக மாறிவிட்டது என குறிப்பி்டடார்.

தொடர்பு கொள்ள முடியாத; கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போர் புரிய வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவித்த அஜித் தோவல், தொழில்நுட்பத்தின் சக்தி அனைத்தையும் மாற்றிவிட்டது என்றார். எதிர்காலத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமானால், மாற்றத்திற்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான வழி என்பது மாறிக்கொண்டே இருக்கக்கூடியது என்றும் அது நிலையான ஒன்றாக இருக்க முடியாது என்றும் தெரிவித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அது நமது தேசிய நலன்களையும் நாட்டின் சொத்துக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கும் சூழலுடன் தொடர்புடையது என தெரிவித்தார்.

நாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வமும் துடிப்புமுள்ள ஒவ்வொரு இளைஞரும் அக்னிவீர் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள அஜித் தோவல், அக்னிவீரராக தேர்வு செய்யப்படுபவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

அக்னிவீர் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், போராட்டம் நடத்துவதற்கு சட்டம் அனுமதிக்கிறது என்றும் அதேநேரத்தில் வன்முறையில் ஈடுபட சட்டம் அனுமதிக்காது என்றும் தெரிவித்தார்.

வன்முறையில் ஈடுபடுபட்டவர்களிடம் நடத்தப்படும் விசாரணையின் மூலம் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது கண்டறியப்படும் என தெரிவித்த அஜித் தோவல், ‘வன்முறை மையங்கள்’ அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ராணுவத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் ரெஜிமெண்ட்டல் முறை அப்படியே தொடரும் என குறிப்பிட்ட அஜித் தோவல், அக்னிவீர் திட்டம் அதில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’விட்றாதீங்கப்பா’ என்று கதறுவது மனதிற்குள் ஒலிக்கிறது’: முதலமைச்சர் உருக்கம்

Halley Karthik

வாடகைக்கு இருந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வீட்டு உரிமையாளர்!

Jeba Arul Robinson

குடிக்காதே என்று சொன்ன மகனை கொன்ற கொடூர தந்தை

Web Editor