கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை

நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசியப் பேரிடர் மீட்பு குழுவினர் 5 பேர் பாதுகாப்பு ஒத்திகை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் தலா…

நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தேசியப் பேரிடர் மேலாண்மை
ஆணையம் மற்றும் தேசியப் பேரிடர் மீட்பு குழுவினர் 5 பேர் பாதுகாப்பு ஒத்திகை
குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன்
கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.
மேலும் 4 அணு உலைகள் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஒத்திகைகள் குறித்தும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த ஐந்து பேர் கூடங்குளம் அணுமின்
நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையச் செயலாளர் கமல் கிஷோர், உறுப்பினர்கள் ராஜேந்திர சிங், எஸ்.கே.கோஸ், தேசிய பேரிடர் மீட்பு குழு டிஐஜி மோஷன் சகடி, துணை கமாண்டன்ட் பிரவீன் பிரசாத், இந்திய அணுசக்தி கழக நிர்வாக இயக்குனர் கே.கே.டி, சேரன்மகாதேவி சப் கலெக்டர் ரிஷப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆய்வுக் கூட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் பிரேம்குமார் கூடன்குளம் அணுமின் நிலையத்தில் அவசர காலங்களில் செய்யப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஒத்திகை குறித்தும் குழுவினருக்கு விளக்கம் அளித்தனர்.

முன்னதாக, தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் குழுவினர் அணு உலை அமைந்த பகுதி மற்றும் முக்கிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.