சூரியனுக்கு மிக அருகில்… வரலாறு படைத்த நாசாவின் விண்கலம்!

நாசாவால் விண்ணில் ஏவப்பட்ட பார்க்கர் விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் சென்று வரலாறு படைத்துள்ளது. நாசா கடந்த 2018ம் ஆண்டு பார்க்கர் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. வெள்ளி கிரகத்தின் சுற்றுவட்ட பாதையின் மூலம் 7…

நாசாவால் விண்ணில் ஏவப்பட்ட பார்க்கர் விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் சென்று வரலாறு படைத்துள்ளது.

நாசா கடந்த 2018ம் ஆண்டு பார்க்கர் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. வெள்ளி கிரகத்தின் சுற்றுவட்ட பாதையின் மூலம் 7 ஆண்டுகள் சூரியனை சுற்றி வந்து ஆய்வு செய்வதே இந்த விண்கலத்தின் நோக்கமாகும். இந்த விண்கலமானது நேற்று (டிச.27) சூரியனுக்கு மிக அருகில் சென்று வரலாறு படைத்துள்ளது. இந்த விண்கலம் சூரியனை 38 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் கடந்தது. 38 லட்சம் கிலோ மீட்டர் மிக தொலைவாக தெரிந்தாலும் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் சூரியனுக்கு அவ்வளவு அருகில் செல்வது இதுவே முதல் முறையாகும்.


இதனால் சூரியனை பற்றி தெரியாத பல தகவல்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்கலமானது சூரியனுக்கு அருகில் செல்லும் போது 1800 டிகிரி ஃபாரன் ஹீட் வெப்பம் அதிகரித்தது. இருப்பினும் விண்கலமானது நன்றாக செயல்படுவதாக நாசா அதிகாரிகள் தெரிவித்தனர். அதிக வெப்பத்தின் காரணமாக விண்கலத்திலிருந்து தகவல் பெறுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று முதல் வின்கலத்திலிருந்து தகவல் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.