நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி உதவியுடன் 390 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள மர்ம விண்வெளி பொருளை (Celestial Object) நாசா கண்டறிந்துள்ளது.
நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி , பூமியிலிருந்து சுமார் 39 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள Z 229-15 என்ற விண்பொருளின் தொடர்ச்சியான புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. இந்த Z 229-15 என்ற விண்பொருள் லைரா விண்மீன் தொகுப்பில் உள்ளது.
ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) வெளியிட்ட அறிக்கையின்படி, 229-15 என்பது பல வகைப்பாடுகளுக்கு பொருந்தக்கூடிய சுவாரஸ்யமான விண்பொருட்களில் ஒன்றாகுமாம். அதிலும் குறிப்பாக Z 229-15 என்கிற இந்த விண்பொருளை நீங்கள் ஆராய்ச்சி செய்யத் தேர்வு செய்தால், நீங்கள் பல்வேறு விஷயங்களைக் அறிய முடியும் என கூறியுள்ளது.
மேலும் இந்த Z 229-15 என்கிற விண்பொருள் ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்ட நட்சத்திரங்களின் தொகுப்பாகும். இது ஒரு விண்மீனின் நட்சத்திரங்களை விட மிகவும் பிரகாசமாக இருக்கும் ஒரு செயலில் உள்ள விண்மீன் கரு (AGN) ஆகும். இந்த விண்மீனின்
மையப்பகுதியில் ஒரு மிகப்பெரிய கருந்துளை இருப்பதால் கூடுதல் ஒளிர்வு ஏற்படுகிறது. இந்த கருந்துளையில் உறிஞ்சப்படும் பொருள் உண்மையில் நேரடியாக அதில் விழவில்லை,
மாறாக ஒரு சுழலும் வட்டில் இழுக்கப்படுகிறது. இந்த வட்டு மிகவும் சூடாவதோடு, அது மின்காந்த நிறமாலை முழுவதும் அதிக அளவு ஆற்றலை வெளிப்படுத்துவதால், அதுதான் AGN களை மிகவும் பிரகாசமாகத் தோன்ற வைக்கிறது ” என்று ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA)கூறியுள்ளது.
இதனாலேயே இந்த புகைப்படத்தை பல ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தும் எடுக்க முடிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பதிவு பகிரப்பட்டு 2 நாட்கள் தான் ஆகியுள்ள நிலையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளதோடு இந்தப்
படத்தைப் பார்த்து பலரும் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா









