விண்வெளியில் வளர்ந்துள்ள அழகான பூ ஒன்றை நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
பூமியும், விண்வெளியும் புதிர் நிறைந்தவை. அங்கு தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. நம்மை பிரமிக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்புகள் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன. பல விஞ்ஞானிகள் விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தோட்டங்கள் அமைத்து காய்கறி செடிகள் பயிரிட்டு வருகின்றனர். அப்படி அங்கு வளர்ந்த அழகான பூவின் படத்தை நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இந்த படம் இணையத்தில் பகிரப்பட்ட சில மணிநேரங்களில் நான்கு லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. இந்த அழகு வளர எத்தனை காலம் ஆனது என வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த அழகை பார்க்க எங்களை விண்வெளிக்கு அழைத்து செல்ல முடியுமா என்று மற்றொருவர் கெஞ்சுகிறார். இந்த பூ பார்ப்பதற்கு மட்டுமா அல்லது பறித்து சூடிக்கொள்ளலாமா என பெண் ஒருவர் கேட்கிறார்.1970ஆம் ஆண்டில் இருந்து விண்வெளியில் தாவரங்கள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. எங்கள் விண்வெளி தோட்டம் ஒரு ஷோவுக்காக அமைக்கப்பட்டதல்ல. சுற்றுப்பாதையில் தாவரங்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதை கற்றுக்கொள்ளவும், பூமியில் பயிர் வளர்ப்பு புதிய நடைமுறைகளை தெரிந்து கொள்ள உதவுகிறது. மேலும் கீரை, தக்காளி, சிலி,மிளகு உள்ளிட்ட பயிர்களும் பயரிடப்படுள்ளது. ஏராளமான தாவரங்கள் பயிரிடப்பட உள்ளதாக கூறுகிறார் விஞ்ஞானி ஒருவர்.






