வெளியானது #NANI32 பட அப்டேட்! அடுத்தாண்டு வெளியாகும் என அறிவிப்பு!

நடிகர் நானியின் 32-ஆவது திரைப்படத்தின் தலைப்பு மற்றும் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகராக இருகும் நானி, வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். நானியின் முந்தைய திரைப்படங்களான ‘ஷியாம்…

Nani 32: Movie Title Announcement With Release Date!

நடிகர் நானியின் 32-ஆவது திரைப்படத்தின் தலைப்பு மற்றும் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருகும் நானி, வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். நானியின் முந்தைய திரைப்படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ திரைப்படங்கள் அமோக வரவேற்பினைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து வெளியான தசரா, ஹாய் நான்னா கலவையான விமர்சனங்களைப் பெற்றன. தற்போது டிவிவி என்டர்டெர்யின்மென்ட் தயாரிக்கும் ‘சரிபோத சனிவாரம்’ (சூர்யாவின் சனிக்கிழமை) எனப் பெயரிடப்பட்டுள்ள படம் ஆகஸ்ட் 29ம் தேதி வெளியாகியது.

நல்ல விமர்சனங்களைப் பெற்றுவரும் இந்த திரைப்படம் 5 நாட்களில் ரூ.75.26 கோடி வசூலித்துள்ளது. இந்நிலையில் நானியின் 32-ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு செப்டம்பர் 5ஆம் தேதி காலை 11.04 மணிக்கு வெளியாகுமென படக்குழு முன்னதாகவே அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது நானியின் 32வது திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘ஹிட் 3’ என இந்தப் படத்தை இயக்குகிறார் சைலேஷ் கொலனு பெயரிடப்பட்டுள்ளார். ஏற்கனவே ‘ஹிட்’ திரைப்படங்களின் இரண்டு பாகங்களும் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. தற்போது 3வது பாகத்தில் நானி நாயகனாக நடிக்கிறார்.

இதையும் படியுங்கள் : GOAT | விஜய் திரைப்படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’? -விசிக எம்.பி. ரவிக்குமார் கண்டனம்…

நானியின் முதல் திரைப்படம் ‘அஷ்ட சம்மா’ திரைப்படம் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி வெளியானது. 16 ஆண்டு திரைத்துறையின் நிறைவு காரணமாக இந்த திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இந்த திரைப்படம் அடுத்தாண்டு மே மாதம் 1ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்கள். வால்போஸ்டர் சினிமா & அனானிமஸ் புரடக்‌ஷன்ஸ் வழங்கும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன் சர்க்கார் கதாபாத்திரத்தில் நானி நடிக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.