“உன்னை புதைக்கவில்லை, விதைத்துள்ளோம்” – பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷின் நினைவு தினத்தையொட்டி #PrakashRaj பதிவு!

படுகொலை செய்யப்பட்ட பிரபல பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் நினைவு தினத்தையொட்டி நடிகர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் தளத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி மற்றும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளை கடுமையாக…

“We didn't bury you, we planted you” - #PrakashRaj's post on journalist Gauri Lankesh's memorial day!

படுகொலை செய்யப்பட்ட பிரபல பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் நினைவு தினத்தையொட்டி நடிகர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் தளத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளை கடுமையாக விமர்சித்து வந்த பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது நண்பர் நடிகர் பிரகாஷ்ராஜ் உட்பட பலர் அவரது கொலைக்கு நீதிகேட்டு குரல் எழுப்பி வருகின்றனர்.

இன்று கௌரி லங்கேஷின் 7வது ஆண்டு நினைவு தினம். இந்நிலையில் கௌரி லங்கேஷ்-ன் நினைவு தினத்தையொட்டி நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,

“உன் பிரிவால் துயருறுகிறோம் கௌரி.. உன்னை புதைக்கவில்லை, விதைத்துள்ளோம். நீ ஒரு உத்வேகம். நாங்கள் உறுதியளிக்கிறோம், உன் குரலை தவறவிடமாட்டோம்” என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.