#NationalWomenChessTournament | சாம்பியன் பட்டம் வென்றார் தமிழ்நாட்டை சேர்ந்த நந்திதா!

50-வது தேசிய மகளிர் செஸ் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த நந்திதா சாம்பியன்பட்டம் வென்றார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மாணகிரியில் செட்டிநாடு பப்ளிக்பள்ளியில் 50-வது தேசிய மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த…

Nandita from Tamil Nadu is the champion in the 50th National Women's Chess Tournament He won the title.

50-வது தேசிய மகளிர் செஸ் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த நந்திதா சாம்பியன்
பட்டம் வென்றார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மாணகிரியில் செட்டிநாடு பப்ளிக்
பள்ளியில் 50-வது தேசிய மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மூன்றாம் தேதி
தொடங்கி 13-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில் 50வது தேசிய மகளிர் செஸ் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி இன்று (அக்.14ம் தேதி ) நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : #AirIndia விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்… டெல்லியில் அவசர தரையிறக்கம்!

இப்போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த நந்திதா சாம்பியன் பட்டம் வென்றார். 11 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் நந்திதா 9 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். நந்திதாவிற்கு முதல் பரிசாக ரூபாய் 7லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டை சேர்ந்த பிரியங்கா, கிரன் மற்றும் பத்மினி 8.5 புள்ளிகளையும், சரண்யா, சிட்லாஞ் சாக்ஷி, கோமஸ் மேரி வர்ஷினி, ரக்ஷித ரவி மற்றும் கல்கர்ணி பக்தி ஆகியோர் 8 புள்ளிகளையும் பெற்றனர். மாநில செஸ் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பி. ஸ்டீபன் பங்குபெற்று போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.