முக்கியச் செய்திகள் தமிழகம்

நந்தனம் நிதித்துறை வளாகத்திற்கு க.அன்பழகன் பெயர்: அமைச்சர் அறிவிப்பு 

நந்தனம் நிதித்துறை வளாகத்திற்கு பேராசிரியர் க.அன்பழகன் பெயர் சூட்டப்படும் என்று நிதித்துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். 

நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்து பேசினார். அப்போது, கடந்த ஒன்றரை வருடமாக மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையில் திடீரென பள்ளிக்கு வந்தால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கு கற்றுக்கொடுக்க முடியாத நிலை ஏற்படுவதோடு, கற்றுக்கொள்வதிலும் சிரமம் இருக்கும் என்றார்.

தற்போது குழந்தை திருமணங்களும், குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுப்பதற்காக இந்த நிதியாண்டில் முதல் நிதி ஒதுக்கீடாக 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் செயல்படும் என்று அறிவித்தார். அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கம் கொடுக்கும் வகையில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும்,  நந்தனத்தில் உள்ள நிதித் துறைக்கு சொந்தமான கட்டிடம் முன்னாள் நிதியமைச்சரும், திமுக வழிகாட்டியுமான பேராசிரியர் க.அன்பழகனின் பெயரால் அழைக்கப்படும் என்ற அறிவிப்பையும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.

Advertisement:
SHARE

Related posts

மழை நீர் சேகரிப்பில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Gayathri Venkatesan

தமிழகத்தில் நாளை முதல் ரேஷன் கடைகளை திறக்க அனுமதி!

Vandhana

புதுச்சேரியில் புது முயற்சி: ஒவ்வொரு கிராமமாகத் தத்தெடுத்து தடுப்பூசி!

Halley karthi