முக்கியச் செய்திகள் தமிழகம்

வட கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

தமிழ்நாட்டின் வட கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த இரண்டு நாட்களுக்கு இப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும்: வழக்கு!

Halley karthi

வேளாண் சட்டங்களை எதிர்த்து முதலமைச்சர் தீர்மானம்: காங்கிரஸ் வரவேற்பு

Gayathri Venkatesan

உட்கட்சி விவகாரத்தை கவனிப்பது தேர்தல் ஆணையத்தின் பணி அல்ல; நீதிமன்றம் காட்டம்

Saravana Kumar