நாமக்கல் அருகே சிவியாம்பாளையத்தில் வெறி நாய்கள் கடித்ததில் 18 ஆடுகள் உயிரிழந்தன.
நாமக்கல் அருகே உள்ள சிவியாம்பாளையம் குடித்தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். ஆடு வியாபாரியான இவர், தனக்குச் சொந்தமான நிலத்தில் வேலி அமைத்து 25க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், நேற்று இரவு தனது ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு கண்ணன் தூங்கச் சென்றார். பின்னர் வழக்கம்போல் காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதற்காக பட்டியில் இருந்த ஆடுகளை பார்க்கச் சென்றார். அப்போது பட்டியில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை வெறிநாய்கள் கடித்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வெறிநாய்கள் கடித்ததில், 18 ஆடுகள் உயிரிழந்தன.
இதையும் படியுங்கள் : இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழ்நாட்டின் இடைத்தேர்தல்கள்!
மேலும் அப்பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்கள், 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் கோழிகளை கடித்துக் கொன்றுள்ளன. மனிதர்களை கடித்து உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்னர், வெறிநாய்களை பிடித்துச் செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– வேந்தன்