நட்சத்திரம் நகர்கிறது ஒரு அரசியல் படம்- பா.ரஞ்சித்

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் ஒரு அரசியல் படம் தான் என இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.  இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷார விஜயன் நடித்த நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் நாளை வெளியாக…

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் ஒரு அரசியல் படம் தான் என இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷார விஜயன் நடித்த நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இப்படத்திற்கான பிரிமியர் காட்சி சென்னை சத்யம் திரையரங்கில் இன்று அதிகாலை திரையிடப்பட்டது. இதனை பட குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் நடிகர் ஆர்யா, ஜெய் பீம் மணிகண்டன், இயக்குனர் அருண் மாதேஸ்வரன், நடிகர் ஜெயராம், ஹரி கிருஷ்ணன், பால சரவணன் இயக்குனர் சசி ஆகியோர் கலந்து கொண்டு படத்தை பார்த்து ரசித்தனர்.

பின்னர் படம் முடிந்த பின் இயக்குனர் பா.ரஞ்சித் செய்தியாளர்களிடம் பேசுகையில், நட்சத்திரம் நகர்கிறது படம் ஒரு அரசியல் படம் தான்? தொடர்ந்து இந்த சமூகம் எனக்கு என்ன கொடுத்ததோ அதை தான் நான் ஒரு கலையாக கொடுத்திருக்கிறேன். மேலும் நான் கலையை பெரும் ஆயுதமாக பார்க்கிறேன். அந்த ஆயுதத்தை நான் இந்த படத்தின் மூலம் சரியாக பயன்படுத்தி இருக்கிறேன். தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது படத்தை வைத்து ரஞ்சித் அரசியல் பேசுகிறாரா என்ற கேள்விக்கு ஆமாம் என்ற பதில் கூறினார்.

நடிகர் ஆர்யா கூறுகையில், ரஞ்சித் படம் என்றாலே புதுமையாகவும் அல்லது சர்ச்சைக்குரியதாகவும் அல்லது வெவ்வேறு கோணங்களிலும் இருக்கும். இந்தப் படம் நட்சத்திரம் நகர்கிறது ஒரு புதுமையான படமாக இருக்கிறது. மேலும் இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்கள். இந்த படத்தை பார்க்கும் போது எனக்கு மிகப் பொறாமையாக இருக்கிறது. நானும் இப்படத்தில் ஒரு நடிகனாக நடித்திருக்கலாம் எனவும், கதாநாயகி துஷாரா விஜயனை நான் சார்பட்டா பரம்பரை படத்தில் ஒரு விதமாகவும் இப்படத்தில் ஒருவிதமாகும் பார்த்தேன் மிகச் சிறப்பாக நடித்துள்ளார் என்றார்.

நடிகர் காளிதாஸ் ஜெயராம், நட்சத்திரம் நகர்கிறது மிகச் சிறப்பான படம் மிகப்பெரிய நடிகர்கள் இருக்கும் மத்தியில் நான் ஒரு வளர்ந்து வரும் நடிகன். இந்த ஆரம்ப கட்டத்திலேயே இந்த ஒரு இப்படம் கிடைத்ததற்கு எனக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக நான் பார்க்கிறேன் என்று கூறினார்.

துஷாரா விஜயன் கூறுகையில், இந்த படத்தில் எனக்கு இரண்டாவது வாய்ப்பாக கொடுத்த பா.ரஞ்சித் அவர்களுக்கு எனது நன்றி மேலும் மாரியம்மாவாய் என்னை உங்களுக்கு பிடித்தது. மேலும் ரினேவாய் இதிலும் என்னை பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.