சென்னையில் பள்ளி மாணவன் உயிரைப் பறித்த “மர்ம வெடிபொருள்” – அதிர்ச்சியில் மக்கள்

சென்னை, கொளத்தூரில் மர்ம பொருள் வெடித்ததில் 12ம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.   பிளஸ் 2 படித்து வந்த மாணவன் ஆதித்ய பிரணவ் அறிவியலில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். எந்த நேரமும் அறிவியல்…

சென்னை, கொளத்தூரில் மர்ம பொருள் வெடித்ததில் 12ம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  

பிளஸ் 2 படித்து வந்த மாணவன் ஆதித்ய பிரணவ் அறிவியலில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். எந்த நேரமும் அறிவியல் சார்ந்த சோதனைகளை வீட்டில் செய்து வருவது வழக்கம். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூட ஆராய்ச்சியின்போது வீட்டில் இருந்து கரும்புகை வருவதாக கண்ட அக்கம் பக்கத்தினர் இதுதொடர்பாக அவரது தந்தைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தாய் கொரோனா தொற்றுக்கு பலியான நிலையில், தந்தையின் அரவணைப்பில் மாணவன் வளர்ந்து வந்தார்.  இந்நிலையில், இன்று மதியம் திடீரென மாணவனின் வீட்டில் இருந்து சத்தம் வரவே அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது மாணவன் சடலமாக கிடந்ததுள்ளார்.

இதுதொடர்பான விசாரணையில், வீட்டில் இருந்த மர்ம பொருள் வெடித்து மாணவன் ஆதித்ய பிரணவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.