நடிகை #Sona வீட்டில் கத்தியுடன் புகுந்த மர்ம நபர்கள்…போலீசார் விசாரணை!

நடிகை சோனா வீட்டிற்குள் மர்ம நபர்கள் சிலர் கத்தியுடன் புகுந்து, கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயலில் நடிகை சோனாவின் வீடு அமைந்துள்ளது. கிருஷ்ணா நகர், 28 வது தெருவில்…

Mysterious persons entered the house of actress Sona with a knife... Police investigation!

நடிகை சோனா வீட்டிற்குள் மர்ம நபர்கள் சிலர் கத்தியுடன் புகுந்து, கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயலில் நடிகை சோனாவின் வீடு அமைந்துள்ளது. கிருஷ்ணா நகர், 28 வது தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு மர்ம நபர்கள் இருவர் சோனாவின் வீட்டு காம்பவுண்ட் சுவரை எகிறி குதித்துள்ளனர். பின்னர் வீட்டின் வெளிப்புறம் பொருத்தப்பட்டுள்ள ஏசி யூனிட்டையுடம் திருட முயன்றுள்ளனர். இரவு நேரம் என்பதால் மர்மநபர்களை கண்டதும் நாய் குரைத்துள்ளது. நாய் நீண்ட நேரமாக குரைத்தால், சத்தம் கேட்டு சோனா வெளியே வந்து பார்த்துள்ளார்.

அப்போது 2 மர்ம நபர்கள் சோனாவை பார்த்ததுமே அங்கிருந்து தப்ப முயன்றிருக்கிறார்கள். உடனே சோனா கூச்சலிட்டு கத்தியுள்ளார். உடனே அந்த மர்ம நபர்கள் சோனாவை கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சோனா அளித்த புகாரின் பேரில், மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து, வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ச்சி செய்தனர். அதனடிப்படையில் கத்தியை காட்டி தப்பி சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.