அறச்சலூர் அருகே மர்மவிலங்கை கண்டுபிடிக்க 9 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதோடு, 3 இடத்தில் கூண்டுகள் அமைபத்து மைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அடுத்த கிழக்கு தலவுமலை பகுதியில் உள்ள ஒரு
தோட்டத்திற்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகுந்த மர்ம விலங்கு ஒன்று
கன்றுக்குட்டியை இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவ
இடத்திற்கு வந்த அறச்சலூர் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதோடு, மர்ம விலங்கின் கால்தடத்தைச் சேகரித்துச் சென்றனர்.
இந்நிலையில், கன்றுக்குட்டியை இழுத்து சென்ற மர்ம விலங்கு சிறுத்தை புலி அல்லது புலியாக இருக்கலாம் என்ற சந்தேகித்துள்ள வனத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பகுதியைச் சுற்றிலும் 9 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ளனர். மேலும் சம்பவ நடந்த இடத்தில் 3 கூண்டும் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், மர்ம விலங்கு பிடிபடும் வரும் வரை யாரும் வனப்பகுதிக்குள் செல்ல
வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ள நிலையில், தீர்த்த
குமாரசாமி மலைக்கோவிலுக்குப் பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகத்தினர் தடை
விதித்துள்ளனர். இந்த நிலையில் 15க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அரச்சலூர், தலவுமலை,வெள்ளி வலசு உள்ளிட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.







