ஒடிசா அரசியலில் கோலோச்சும் தமிழர்; யார் இந்த வி.கே.பாண்டியன்?

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளர் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த வி.கே. பாண்டியன், தற்போது அம்மாநில கேபினெட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.…

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளர் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த வி.கே. பாண்டியன், தற்போது அம்மாநில கேபினெட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளர் வி.கே.பாண்டியன், VRS அதாவது விருப்ப ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். அவரது விண்ணப்பத்தை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.

யார்பாண்டியன் யார்?

49 வயதான பாண்டியன் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2000ஆம் ஆண்டு பேட்ச் ஒடிசா கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர். 2002ஆம் ஆண்டு அம்மாநிலத்தின் கலஹண்டி மாவட்டத்தில் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பின்னர் அங்கு பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றியுள்ளார்.
ஒடிசா ஐஏஎஸ் அதிகாரி சுஜாதா ரவுத்தை மணந்த பிறகு அவரது  கேடரை ஒடிசாவுக்கு மாற்றினார்.

2011ஆம் ஆண்டு முதல் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராகவும், அவரது வலது கரமாகவும் இருந்து வருகிறார். பாண்டியன் ஒடிசாவில் பல அரசாங்கத் திட்டங்களின்
சிற்பியாகவும் கருதப்படுகிறார். சர்ச்சின் ‘5டி’க்கு மூளையாக இருந்தவர் என்றும் கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் கேமராக்களை தவிர்த்து வந்த பாண்டியன், தற்போது தனது சொந்த கேமரா குழுவை தன்னுடன் கொண்டு செல்கிறார் என ஒரு ஊடக அறிக்கை கூறுகிறது.
இன்ஸ்டாகிராமில் அவருக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

இவருடைய பலம் எப்படி அதிகரித்தது?

2011 ஆம் ஆண்டு  மயூர்பஞ்ச் மற்றும் கஞ்சம், அதாவது முதல்வரின் சொந்த மாவட்டத்தை கலெக்டராக கையாண்ட பிறகு, அவரது அந்தஸ்து வேகமாக வளர்ந்ததாக செய்திகள் உள்ளன. கஞ்சத்தில் அவரின் பணிகளால் அவர் முதல்வர் பட்நாயக்கின் கவனத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

பட்நாயக்கின் முன்னாள் ஆலோசகரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான பியாரி மோகன் மொகபத்ரா விலகிய பிறகு, பாண்டியன் முதல்வரின் நெருங்கிய வட்டத்தில் சேர்ந்தார் என்று நம்பப்படுகிறது.

அரசியல் சர்ச்சை: 

கடந்த சில மாதங்களாக, ஒடிசாவில் எதிர்க்கட்சிகளின் இலக்காக பாண்டியன் தொடர்ந்து இருந்து வருகிறார். குறிப்பாக மாவட்ட சுற்றுப்பயணங்களுக்கு அரசு ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவதை எதிர்கட்சிகள் சுட்டிக்காடி வருகின்றன. அதுமட்டுமின்றி, பிஜு ஜனதா தள பேரணிகள் போல் காட்சியளிக்கும் பெரிய பொதுக்கூட்டங்களிலும் அவர் பேசுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக எம்பி அபராஜிதா சாரங்கி வலியுறுத்தியுள்ளார்.

பாண்டியன் சாலைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் கட்டுமானப் பணியிடங்களில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். அதுமட்டுமன்றி, மகளிர் சுயஉதவி குழுக்களுடன் அடிக்கடி சந்திப்பும் நடந்து வருகிறது.

மாநிலத்தில் பிஜேடிக்கு பெண்கள் பெரிய ஆதரவு தளமாக உள்ளனர். அவரது மனைவி மிஷன் சக்தி துறைக்கு தலைமை தாங்குகிறார். இதன் கீழ், சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. இதுபோன்ற 6 லட்சத்துக்கும் அதிகமான குழுக்களில் 70 லட்சம் பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது பிஜேடிக்கு பெரிய வாக்கு வங்கியாக இருப்பதை நிரூபிக்க முடியும்.

அடுத்து என்ன:

விஆர்எஸ் (விருப்ப ஓய்வு) எடுத்த ஒரு நாளிலேயே, வி.கே. பாண்டியனுக்கு அம்மாநில கேபினெட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

இது தொடர்பாக ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் சுரேந்திர குமார் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில், “மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி(Transformational Initiatives) திட்டம் மற்றும் நபின் ஒடிசாவின் தலைவராக வி.கே. பாண்டியன் நியமிக்கப்படுகிறார். இந்த பதவி, கேபினெட் அமைச்சருக்கு இணையான பதவி. இனி, இவர் முதல்வருக்குக் கீழ் நேரடியாக பணியாற்றுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்நாயக் ஆலோசனையின் பேரிலேயே அவர் விருப்ப ஓய்வு பெற்றதாகவும், விரைவில் அவர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒடிசா சட்டமன்றத் தேர்தலிலும் அவர் களமிறங்கலாம் என்றும் பிஜு ஜனதா தளம் கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் பலரும் கருதுகின்றனர். சமீபத்தில் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரை சந்தித்த போது கூட மூன்றாவது நபராக பாண்டியன் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.