என்னது வெண்டைக்காயில சமோசாவா…? – இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

தலைப்பைப் படித்தவுடன் நாங்கள் கேலி செய்கிறோம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ’வெண்டைக்காய்’ சமோசா என்பது இணையத்தில் பரபரப்பான ஒரு உணவாக உள்ளது. டெல்லியின் சாந்தினி சாலையோர உணவகம் ஒன்று பிண்டி சமோசாவை விற்றுக்…

தலைப்பைப் படித்தவுடன் நாங்கள் கேலி செய்கிறோம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ’வெண்டைக்காய்’ சமோசா என்பது இணையத்தில் பரபரப்பான ஒரு உணவாக உள்ளது.

டெல்லியின் சாந்தினி சாலையோர உணவகம் ஒன்று பிண்டி சமோசாவை விற்றுக் கொண்டிருந்தது. இந்த புதுமையான உணவை முயல்வதற்காக உணவுப் பிரியர் ஒருவர் அங்கு சென்றுள்ளார். ஃபேஸ்புக்கில் ஃபுட் லவர் என்ற பக்கத்தால் பகிரப்பட்ட இந்த கிளிப், இதுவரை 11 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.

ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட கிளிப், ஒரு நபர் அதில் வெண்டைக்காயைத் திணித்து சமோசா தயாரிப்பதைக் காட்டுகிறது. இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளுடன் வைரலாகியுள்ளது.

ஆச்சரியப்படும் விதமாக, பேஸ்புக் பயனர்களில் கணிசமான பகுதியினர் விசித்திரமான இந்த உணவை முயற்சிக்க விருப்பம் தெரிவித்தனர்.சமோசா எவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறது என்று பலர் கருத்து தெரிவித்தனர். இருப்பினும், சிலர் இந்த உணவை முற்றிலுமாக நிராகரித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.