முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா

’என் குடும்பம் கைவிட்டுவிட்டது’: உதவிக்கு ஏங்கும் ’ஸ்ரீகிருஷ்ணா’ நடிகர்!

தனது குடும்பம் கைவிட்டுவிட்டதால் கடும் கஷ்டத்தில் தவிப்பதாக பிரபல நடிகர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’ஸ்ரீகிருஷ்ணா’ என்ற ஆன்மிகத் தொடரில் பீஷ்மராக நடித்தவர் சுனில் சாகர். ’மகாபலி ஹனுமான்’ என்ற தொடரில் பிரம்மனாகவும் நடித்திருந்தார். ஸ்ரீகணேஷ், ஓம் நவச் சிவாயா உட்பட சில தொடர்களில் நடித்துள்ள சுனில் சாகர், ’தால்’உட்பட இந்தி படங் களிலும் நடித்துள்ளார்.

இவர், தனது குடும்பம் தன்னை கைவிட்டுவிட்டதால் கஷ்டப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘நான் என் மகனை கான்வென்டில் படிக்க வைத்தேன். சிறந்த கல்வியை கொடுத்தேன். அதற்காக என் சேமிப்புகளை செலவழித் தேன். ஆனால் என் மகனும் உறவினர்களும் என்னை கைவிட்டு விட்டனர். இதனால் தினசரி செலவுகளுக்கு கஷ்டப்பட்டு வருகிறேன். சூழ்நிலை காரணமாக, ஓஷிவாராவில் உள்ள வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். நல்ல வேளையாக, எனக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், மற்ற உடல் நலப் பிரச்னைகள் உள்ளன’ என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, ‘நான் பயிற்சி பெற்ற பாடகனும் கூட. சில நாட்களுக்கு முன் ரெஸ்டாரன்ட் ஒன்றில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் எனது தினசரி செலவுகளை பார்த்துக்கொண்டனர். ஆனால், லாக்டவுன் அறிவிக்கப்பட்டதை அடுத்து ரெஸ்டாரன்ட்டை மூடிவிட்டனர். இதனால் சில மாதங்களாக வாடகை கூட கொடுக்க வில்லை என்று கூறியுள்ளார் சுனில் நாகர்.

இவர், இந்தி சினிமா மற்றும் டிவி நடிகர்கள் சங்கத்தில் உதவி கேட்டதை அடுத்து அவர்கள் உதவுவதாகக் கூறியுள்ளனர். ஆனால், அதற்கு எவ்வளவு நாளாகும் என்பது தெரியாது என்கிறார் சுனில் நாகர்.

Advertisement:

Related posts

ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழப்பு!

Jeba Arul Robinson

ஒரு பீங்கான் கிண்ணத்தின் விலை 3.6 கோடியா?

Ezhilarasan

கன்னியாகுமரியில் அதிமுக -திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு!

Ezhilarasan